[Kathiruntha Kangal] Valarntha Kalai …
Movie: Kathiruntha Kangal
Poet: Kannadasan
Music: Viswanathan–Ramamoorthy
Singers: P. B. Sreenivas, P. Susheela
Year: 1962
வளர்ந்த கலை மறந்து விட்டாள் கேளடா கண்ணா
அவள் வடித்து வைத்த ஓவியத்தைப் பாரடா கண்ணா
வளர்ந்த கலை மறந்து விட்டாள் கேளடா கண்ணா
அவள் வடித்து வைத்த ஓவியத்தைப் பாரடா கண்ணா
She’s forgotten the skills she once grew, listen, my son,
Look at the painting she once carefully drew, my son.
She’s forgotten the skills she once grew, listen, my son,
Look at the painting she once carefully drew, my son.
குடும்பக் கலை போதும் என்று கூறடா கண்ணா
அதில் கூட இந்தக் கலைகள் வேறு ஏனடா கண்ணா
குடும்பக் கலை போதும் என்று கூறடா கண்ணா
அதில் கூட இந்தக் கலைகள் வேறு ஏனடா கண்ணா
Tell your father that family skills are enough, my son,
Why still pursue these other arts too, my son?
Tell your father that family skills are enough, my son,
Why still pursue these other arts too, my son?
வளர்ந்த கலை மறந்து விட்டாள் கேளடா கண்ணா
அவள் வடித்து வைத்த ஓவியத்தைப் பாரடா கண்ணா
She’s forgotten the skills she once grew, listen, my son,
Look at the painting she once carefully drew, my son.
காதல் சொன்ன பெண்ணை இன்று காணமே கண்ணா
காதல் சொன்ன பெண்ணை இன்று காணமே கண்ணா
கட்டியவள் மாறி விட்டாள் ஏனடா கண்ணா
தாலி கட்டியவள் மாறி விட்டாள் ஏனடா கண்ணா
The girl who spoke of love, where is she now, my son?
The girl who spoke of love, where is she now, my son?
The one I married has changed, tell me why, my son?
The bride I tied the sacred thread to, why has she changed, my son?
காதலிதான் மனைவி என்று கூறடா கண்ணா
அந்தக் காதலிதான் மனைவி என்று கூறடா கண்ணா
அன்று கண்ணை மூடிக் கொண்டிருந்தார் ஏனடா கண்ணா
Tell him that the one who loved him is still his wife, my son,
Tell him that the one who loved him is still his wife, my son,
Why did he close his eyes back then, my son?
மனதில் அன்றே எழுதி வைத்தேன் தெரியுமா கண்ணா
அதை மறுபடியும் எழுதச் சொன்னால் முடியுமா கண்ணா
I wrote it in my heart that day, do you know, my son?
If asked to write it again, could I even do so, my son?
தினம் தினம் ஏன் கோபம் கொண்டாள் கூறடா கண்ணா
அவள் தேவை என்ன ஆசை என்ன கேளடா கண்ணா
Why does she grow angry every day, tell me, my son?
What does she need, what does she desire—ask her, my son.
நினைப்பதெல்லாம் வெளியில் சொல்ல முடியுமா கண்ணா
அதை நீ பிறந்த பின்பு கூற இயலுமா கண்ணா
Can one say aloud everything they think, my son?
Can I tell you all of this only after you’re born, my son?
வளர்ந்த கலை மறந்து விட்டாள் கேளடா கண்ணா
அவள் வடித்து வைத்த ஓவியத்தைப் பாரடா கண்ணா
She’s forgotten the skills she once grew, listen, my son,
Look at the painting she once carefully drew, my son.
இன்று வரை நடந்ததெல்லாம் போகட்டும் கண்ணா
இனி என்னிடத்தில் கோபமின்றி வாழச் சொல் கண்ணா
Let all that has happened until now just pass, my son,
Tell her to live with me from now on without anger, my son.
அவரில்லாமல் எனக்கு வேறு யாரடா கண்ணா
நான் அடைக்கலமாய் வந்தவள்தான் கூறடா கண்ணா
Who else do I have besides him, my son?
Tell him I came to him seeking refuge, my son.
Valarntha Kalai lyrics and translation