[Valar Pirai] Poojiyathukkulle Oru
Who is god? Kannadasan explains. There is no more need of any more explanation after this.
This is the whole poem. The lines that apprear in the movie are highlighted.
Movie: Valar Pirai
Music Director: K. V. Mahadevan
Singer: T. M. Soundararajan
Poet: Kannadasan
Year: 1962
பூஜ்ஜியத்துக்குள்ளே ஒரு
ராஜ்ஜியத்தை ஆண்டுகொண்டு
புரியாமலே இருப்பான் ஒருவன்
அவனைப் புரிந்துகொண்டால் அவன்தான் இறைவன்
poojiyathukkuLLae oru
raajiyathai aaNduhoNdu
puriyaamalae iruppaan oruvan
avanaip purindhuhoNdaal avandhaan iRaivan
in the nothingness ( encompassing everything ),
he rules it all,
he remains an enigma,
if you begin to understand him, he is god! ( you will see god)
ஒன்பது ஓட்டைக்குள்ளே
ஒருதுளிக் காற்றை வைத்து
சந்தையில் விற்றுவிட்டான் ஒருவன்
அவன் தடம் தெரிந்தால் அவன்தான் இறைவன்
onbadhu oattaikkuLLae
orudhuLik kaatRai vaithu
chandhaiyil vitRuvittaan oruvan
avan thadam therindhaal avandhaan iRaivan
in the nine gates of the human body (Two eyes, two ears, your mouth, your nostrils, your anus and genitals),
placing a drop of breathe (life),
he sold us in the market (by making us born), the one,
if you are able to realise his track, he is god! ( you will see god)
தென்னை இளநீருக்குள்ளே
தேங்கியுள்ள ஓட்டுக்குள்ளே
தேங்காயைப் போலிருப்பான் ஒருவன்
அவனைத் தெரிந்து கொண்டால் அவன்தான் இறைவன்
thennai iLaneerukkuLLae
thaengiyuLLa oattukkuLLae
thaengaayaip poaliruppaan oruvan
avanaith therindhu koNdaal avandhaan iRaivan
in the tender coconut,
in its floating core shell,
he stays as the flesh of coconut,
if you begin to know him, he is god! ( you will see god)
முற்றும் கசந்ததென்று
பற்றறுத்து வந்தவர்க்கு
சுற்றமென நின்றிருப்பான் ஒருவன்
அவனைத் தொடர்ந்து சென்றால் அவன்தான் இறைவன்
mutRum kasandhadhenRu
patRaRuthu vandhavarkku
chutRamena ninRiruppaan oruvan
avanaith thodarndhu chenRaal avandhaan iRaivan
For those who after realising every thing as bitter
and come completely detached,
there is one who became dearer as a friend (relation),
if you continue to trace him, he is god ( you will see god)
வெள்ளருவிக் குள்ளிருந்து
மேலிருந்து கீழ்விழுந்து
உள்ளுயிரைச் சுத்தம் செய்வான் ஒருவன்
அவனை உணர்ந்து கொண்டால் அவன்தான் இறைவன்
veLLaruvik kuLLirundhu
maelirundhu keezhvizhundhu
uLLuyiraich chutham cheyvaan oruvan
avanai uNarndhu koNdaal avandhaan iRaivan
from with in the white water falls,
falling incessantly from the the top to bottom,
he constantly cleanses the soul
if you are able to realise him, he is god ( you will see god)
வானவெளிப் பட்டணத்தில்
வட்டமதிச் சக்கரத்தில்
ஞானரதம் ஓட்டிவரும் ஒருவன்
அவனை நாடிவிட்டால் அவன்தான் இறைவன்
vaanaveLip pattaNathil
vattamadhich chakkarathil
nyyaanaradham oattivarum oruvan
avanai naadivittaal avandhaan iRaivan
In the expanses of the skies,
riding on the wheels of intelligence,
there is one who is riding the chariot of wisdom,
if you seek him, he is god ( you will see god)
அஞ்சுமலர்க் காட்டுக்குள்ளே
ஆசைமலர் பூத்திருந்தால்
நெஞ்சமலர் நீக்கிவிடும் ஒருவன்
அவனை நினைத்துக்கொண்டால் அவன்தான் இறைவன்
anjumalark kaattukkuLLae
aasaimalar poothirundhaal
nenjamalar neekkividum oruvan
avanai ninaithukkoNdaal avandhaan iRaivan
In the forest of five flowers,
if the flower of your desire has blossomed,
there is one who removes the flower ( of desire),
if you keep him in your thoughts, he is god ( you will see god )
கற்றவர்க்குக் கண் கொடுப்பான்
அற்றவர்க்குக் கை கொடுப்பான்
பெற்றவரைப் பெற்றெடுத்த ஒருவன்
அவனை பின்தொடர்ந்தால் அவன்தான் இறைவன்
katRavarkkuk kaN koduppaan
atRavarkkuk kai koduppaan
petRavaraip petRedutha oruvan
avanai pindhodarndhaal avandhaan iRaivan
He is the one who gives vision to the learned,
He is the one who gives hands to those who have renounced everything,
there is one who created the creators,
if you follow him, he is god ( you will see god)
பஞ்சுபடும் பாடுபடும்
நெஞ்சுபடும் பாடறிந்து
அஞ்சுதலைத் தீர்த்துவைப்பான் ஒருவன்
அவன்தான் ஆறுதலைத் தந்தருளும் இறைவன்
panjubadum paadubadum
nenjubadum paadaRindhu
anjudhalaith theerthuvaippaan oruvan
avandhaan aaRudhalaith thandharuLum iRaivan
realising the sufferings of the heart,
much like the suffering of the cotton,
there is one who solves your fears and problems,
he is none other than the solace granting god,
கல்லிருக்கும் தேரைகண்டு
கருவிருக்கும் பிள்ளை கண்டு
உள்ளிருந்து ஊட்டிவைப்பான் ஒருவன்
அதை உண்டுகளிப் போர்க்கவனே இறைவன்
kallirukkum thaeraihaNdu
karuvirukkum piLLai kaNdu
uLLirundhu oottivaippaan oruvan
adhai uNduhaLip poarkkavanae iRaivan
the one who sees the toad hinding in the stones,
the one who sees the child in the womb,
there is one who provides them nutrition,
the one who eats and enjoys with them, he is god!
முதலினுக்கு மேலிருப்பான்
முடிவினுக்குக் கீழிருப்பான்
உதவிக்கு ஓடிவரும் ஒருவன்
அவனை உணர்ந்து கொண்டால் அவன்தான் இறைவன்
mudhalinukku maeliruppaan
mudivinukkuk keezhiruppaan
udhavikku oadivarum oruvan
avanai uNarndhu koNdaal avandhaan iRaivan
he is one transcending the beginning,
the is one beyond the end,
he comes running for help,
if you are able to realise him, he is god (you will see god)
நெருப்பினில் சூடு வைத்தான்
நீரினில் குளிர்ச்சி வைத்தான்
கறுப்பிலும் வெண்மை வைத்தான் ஒருவன்
உள்ளம் கனிந்து கண்டால் அவன்தான் இறைவன்
neruppinil choodu vaithaan
neerinil kuLirchi vaithaan
kaRuppilum veNmai vaithaan oruvan
uLLam kanindhu kaNdaal avandhaan iRaivan
he is the one who made the heat in fire,
he is the one who kept coldness in water,
he is the who kept white within black,
if you revere him with all your heart, he is god (you will see god)
உள்ளத்தின் உள் விளங்கி
உள்ளுக் குள்ளே அடங்கி
உண்டென்று காட்டிவிட்டான் ஒருவன்
ஓர் உருவமில்லா அவன்தான் இறைவன்.
uLLathin uL viLangi
uLLuk kuLLae adangi
uNdenRu kaattivittaan oruvan
oar uruvamillaa avandhaan iRaivan.
he comes as a deep realization in the heart,
he gets subsumed in the heart,
he shows that he exists,
he is the formless one, he is god!
கோழிக்குள் முட்டை வைத்து
முட்டைக்குள் கோழி வைத்து
வாழைக்கும் கன்றுவைத்தான் ஒருவன்
அந்த ஏழையின் பேர் உலகில் இறைவன்
koazhikkuL muttai vaithu
muttaikkuL koazhi vaithu
vaazhaikkum kanRuvaithaan oruvan
andha aezhaiyin paer ulahil iRaivan
he kept the egg in the hen,
and the hen inside the egg,
he is the one gave progeny even to the banana plant,
that complicated simpleton, is known as god on this earth!
சின்னஞ்சிறு சக்கரத்தில்
ஜீவன்களைச் சுற்ற வைத்து
தன்மைமறந்தே இருக்கும் ஒருவன்
அவனைத் தழுவிக் கொண்டால் அவன்தான் இறைவன்
chinnanjiRu chakkarathil
jeevangaLaich chutRa vaithu
thanmaimaRandhae irukkum oruvan
avanaith thazhuvik koNdaal avandhaan iRaivan
in a small wheel,
he rotate the souls,
he is the one who lives forgetting who he is,
if you embrace him, he is god ( you will see god)
தான் பெரிய வீரனென்று
தலை நிமிர்ந்து வாழ்பவர்க்கும்
நாள் குறித்துக் கூட்டிச்செல்லும் ஒருவன்
அவன்தான் நாடகத்தை ஆடவைத்த இறைவன்
thaan periya veeranenRu
thalai nimirndhu vaazhbavarkkum
naaL kuRithuk koottichellum oruvan
avandhaan naadahathai aadavaitha iRaivan
for those who live with great pride
about their bravery,
he fixes a date even for them and takes them ( death),
he is the one who directs the drama, the god!
[Poojiyathukkulle Oru lyrics and translation]