[Bharathi Vasana kavidhai] Sakthi – Happiness Part 2
சக்தி
முதற் கிளை: இன்பம்
2
காக்கை கத்துகிறது. ஞாயிறு வையகமாகிய கழனியில் வயிரவொளியாகிய நீர் பாய்ச்சுகிறது. அதனை மேகங்கள் வந்து மறைக்கின்றன. அஃது மேகங்களை ஊடுருவிச் செல்லுகின்றது. மேகமாகிய சல்லடையில் ஒளியாகிய புனலை வடிகட்டும் போது, மண்டி கீழும் தெளிவு மேலுமாக நிற்கின்றன. கோழி கூவுகின்றது. எறும்பு ஊர்ந்து செல்கின்றது. ஈ பறக்கின்றது. இளைஞன் சித்திரத்திலே கருத்துச் செலுத்துகிறான். இவையனைத்தும் மஹாசக்தியின் தொழில். அவள் நம்மைக் கர்ம யோகத்தில் நாட்டுக. நமக்குச் செய்கை, இயல்பாகுக. ரசமுள்ள செய்கை, இன்பமுடைய செய்கை, வலிய செய்கை, சலிப்பில்லாத செய்கை, விளையும் செய்கை, பரவும் செய்கை, கூடிவரும் செய்கை, இறுதியற்ற செய்கை, நமக்கு மஹாசக்தி அருள் செய்க. கவிதை, காவல், ஊட்டுதல், வளர்த்தல், மாசெடுத்தல், நலந்தருதல், ஒளிபெய்தல் -- இச்செயல்கள் நமக்கு மஹாசக்தி அருள்புரிக. அன்புநீர் பாய்ச்சி, அறிவென்னும் ஏருழுது, சாத்திரக் களைபோக்கி, வேதப் பயிர்செய்து, இன்பப் பயனறிந்து தின்பதற்கு மஹாசக்தியின் துணை வேண்டுகிறோம். அதனை அவள் தருக.
Crow caws. In the field that is the world, the Sun floods it with light, which is like the glitter of the diamond. That is shadowed by the clouds. The light pierces through the clouds. When the flood of light is filtered through the sieve of clouds, the dust settles down and the clearer part above it. Hen crows. Ant crawls. Housefly flies. Young man concentrates on the art. All these are the works of the great Sakthi. Let her lead us to do what is to be done righteously. Let our deeds be natural. Charming deeds, Happy deeds, Powerful deeds, untiring deeds, causing deeds, spreading deeds, happening deeds, endless deeds, Let the great Sakthi bless us. Poetry, Protection, Feeding, Raising, Pruning, Caring, Showering with light -- Let the great Sakthi bless us in these deeds. By irrigating with love, ploughing with knowledge, Removing the weeds of (baseless old) customs, Growing the crop of Holy Scriptures, Reaping the benefits of happiness and for consuming it, we pray for the grace of the great Sakthi. Let her bless us with them.
kaakkai kathugiRadhu. nYaayiRu vaiyagamaagiya kazhaniyil vayiravoLiyaagiya neer paaychchugiRadhu. adhanai maegangaL vandhdhu maRaikkindRana. akhdhu maegangaLai ooduruvi chellugindRadhu. maegamaagiya salladaiyil oLiyaagiya punalai vadigattum poadhu, maNdi keezhum theLivu maelumaaga niRkindRana. koazhi koovugindRadhu. eRumpu oorndhdhu selkindRadhu. ee paRakkindRadhu. iLainjan sithirathilae karuthu cheluthugiRaan. ivaiyanaithum maHaasakthiyin thozhil. avaL nammaik karma yoagathil naattuga. namakku cheykai, iyalbaaguga. rasamuLLa seykai, inpamudaiya seykai, valiya seykai, salippillaadha seykai, viLaiyum seykai, paravum seykai, koodivarum seykai, iRudhiyatRa seykai, namakku maHaasakthi aruL seyka. kavidhai, kaaval, oottudhal, vaLarthal, maaseduthal, nalandhdharudhal, oLibeydhal -- ichcheyalkaL namakku maHaasakthi aruLpuriga. anpuneer paaychchi, aRivennum aeruzhudhu, saathirak kaLaiboakki, vaedhap payircheydhu, inpap payanaRindhdhu thinpadhaRku maHaasakthiyin thuNai vaeNdugiRoam. adhanai avaL tharuga.
Note: Sakthi literally means Power and also the name of Goddess.
[paypal_donation_button align=”center”]
people found this article helpful. What about you?