[Bharathi Vasana kavidhai] Vision – Fame Part 9
இரண்டாங் கிளை: புகழ் ஞாயிறு 9
வானவெளி என்னும் பெண்ணை ஒளியென்னும்
தேவன் மணநதிருக்கின்றான்.
அவர்களுடைய கூட்டம் இனிது.
இதனைக் காற்றுத்தேவன் கண்டான்.
காற்று வலிமை யுடையவன்.
இவன் வானவெளியைக் கலக்க விரும்பினான்.
ஒளியை விரும்புவதுபோல வானவெளி இவனை விரும்பவில்லை.
இவன் தனது பெருமையை ஊதிப் பறை யடிக்கின்றான்.
வெளியும் ஒளியும் இரண்டு உயிர்கள் கலப்பதுபோல் கலந்தன.
காற்றுத் தேவன் பொறாமை கொண்டான்.
அவன் அமைதியின்றி உழலுகிறான்.
அவன் சீறுகின்றான், புடைக்கின்றான், குமுறுகின்றான்.
ஓலமிடுகின்றான், சுழலுகின்றான், துடிக்கின்றான்;
ஓடுகின்றான், எழுகின்றான், நிலையின்றிக் கலங்குகின்றான்.
வெளியும் ஒளியும் மோனத்திலே கலந்து நகைசெய்கின்றன.
காற்றுத் தேவன் வலிமையுடையவன்.
அவன் புகழ் பெரிது. அப் புகழ் நன்று.
ஆனால் வானவெளியும் ஒளியும் அவனிலும் சிறந்தன.
அவை மோனத்தில் கலந்து நித்தம் இன்புறுவன.
அவை வெற்றியுடையன.
ஞாயிறே, நீதான் ஒளித்தெய்வம்.
நின்னையே வெளிப்பெண் நன்கு காதல் செய்கிறாள்.
உங்கள் கூட்டம் மிக இனிது. நீவிர் வாழ்க.
The vast sky as a woman is married by the Lord of Light.
There partnership is nice.
This is seen by the Lord of Wind.
The Wind is powerful.
He desired to partner with the vast sky.
Like liking the Light, the vast sky didn't like him.
He blows trumpets of his pride.
The sky and light has merged like the merging of two souls.
The Lord of Wind got jealous.
He toils without peace.
He hisses, swells, grunts, whimpers, swirls, shivers;
Runs, raises, distraught.
The sky and light smiles together in their togetherness.
The Lord of Wind is powerful.
His fame is huge. That fame is good.
But the vast sky and the Light are better than that.
They attain happiness at all times by their togetherness.
They are victorious.
Oh Sun, you are indeed the Lord of Light.
The sky girl is in deep love with you.
Your partnership is very nice. Let you live long.
vaanaveLi ennum peNNai oLiyennum
thaevan maNanadhirukkindRaan.
avarkaLudaiya koottam inidhu.
idhanaik kaatRuthaevan kaNdaan.
kaatRu valimai yudaiyavan.
ivan vaanaveLiyaik kalakka virumpinaan.
oLiyai virumpuvadhuboala vaanaveLi ivanai virumpavillai.
ivan thanadhu perumaiyai oodhip paRai yadikkindRaan.
veLiyum oLiyum iraNdu uyirkaL kalappadhuboal kalandhdhana.
kaatRuth thaevan poRaamai koNdaan.
avan amaidhiyindRi uzhalugiRaan.
avan seeRugindRaan, pudaikkindRaan, kumuRugindRaan.
oalamidugindRaan, suzhalugindRaan, thudikkindRaan;
oadugindRaan, ezhugindRaan, nilaiyindRik kalanggugindRaan.
veLiyum oLiyum moanathilae kalandhdhu nagaiseykindRana.
kaatRuth thaevan valimaiyudaiyavan.
avan pugazh peridhu. ap pugazh nandRu.
aanaal vaanaveLiyum oLiyum avanilum siRandhdhana.
avai moanathil kalandhdhu nitham inpuRuvana.
avai vetRiyudaiyana.
nYaayiRae, needhaan oLitheyvam.
ninnaiyae veLippeN nangu kaadhal seykiRaaL.
ungaL koottam miga inidhu. neevir vaazhka.
people found this article helpful. What about you?