[Kochadaiiyaan] Manapennin Sathiyam
Movie: Kochadaiiyaan
Lyricist: Vairamuthu
Singers: Latha Rajinikanth
Music: A. R. Rahman
Year: 2014
Song sequence: (1)-(2)-(3)-(4)-(5)-(6)-(1)-(2)-(7)-(8)-(9)-(10)-(1)-(2)-(3)
(1) காதல் கணவா உந்தன் கரம் விட மாட்டேன் சத்தியம் சத்தியம் இது சத்தியமே
kaadhal kaNavaa
undhdhan karam vida maattaen
sathiyam sathiyam
idhu sathiyamae
Oh my loving husband,
I’ll never separate from you,
Promise, promise,
I promise to you!
(2) தாய் வழி வந்த தர்மத்தின் மேலே சத்தியம் சத்தியம் இது சத்தியமே
thaay vazhi vandhdha
tharmathin maelae
sathiyam sathiyam
idhu sathiyamae
Upon the righteousness
that transcends from a mother,
Promise, promise,
I promise to you
(3) ஒரு குழந்தை போலே ஒரு வைரம் போலே தூய்மையான என் சத்தியம் புனிதமானது
oru kuzhandhdhai poalae
oru vairam poalae
dhooymaiyaana en sathiyam punidhamaanadhu
Like the unadulterated purity
Of a new born, of a diamond,
My divine promise is also pure!
(4) வாழை மரம் போல என்னை வாரி வழங்குவேன் ஏழை கண்ட புதையல் போல ரகசியம் காப்பேன்
vaazhai maram poala
ennai vaari vazhangguvaen
aezhai kaNda pudhaiyal
poala ragasiyam kaappaen
I’ll generously give out,
Like a plantain tree,
I’ll treasure secrets, just like
A poor man treasures his treasure!
(5) கணவன் என்ற சொல்லின் அர்த்தம் கண் அவன் என்பேன் உனது உலகை எனது கண்ணில் பார்த்திட செய்வேன்
kaNavan endRa sollin artham
kaN avan enpaen
unadhu ulagai enadhu kaNNil
paarthida seyvaen
I’ll say the meaning of the word
‘kanavan’ – husband means
‘kan avan’ he is my eye
I’ll make you see your world,
With my eyes / perspective.
(6) மழை நாளில் உன் மார்பில் கம்பிளி ஆவேன் மலை காற்றாய் தலை கோதி நித்திரை தருவேன்
mazhai naaLil un maarpil
gampiLi aavaen
malai kaatRaay thalai koadhi
nithirai tharuvaen
In the rainy days,
I’ll be a blanket to you,
I’ll lull you to sleep,
By caressing your head,
Just like the breeze from the hills
(7) உனது உயிரை எனது வயிற்றில் ஊற்றி கொள்வேன் உனது வீரம் எனது சாரம் பிள்ளைக்கு தருவேன்
unadhu uyirai enadhu vayitRil
ootRi koLvaen
unadhu veeram enadhu saaram
piLLaikku tharuvaen
I’ll carry your life,
In my womb
I’ll give our child
Your courage and my essence
(8) கால மாற்றம் நேரும் போது கவனம் கொள்வேன் கட்டில் அறையில் சமையல் அறையில் புதுமை செய்வேன்
kaala maatRam naerum poadhu
gavanam koLvaen
kattil aRaiyil samaiyal aRaiyil
pudhumai seyvaen
I’ll take care to notice the changes of aging,
I’ll be innovative in the bed as well as kitchen.
(9) அழகு பெண்கள் பழகினாலும் ஐயம் கொள்ளேன் உன் ஆண்மை நிறையும் போது உந்தன் தாய் போல் இருப்பேன்
azhagu peNkaL pazhaginaalum
aiyam koLLaen un
aaNmai niRaiyum poadhu undhdhan
dhaay poal iruppaen
I’ll not doubt you, even when you talk with beautiful girls,
I’ll be like a mother, when you start aging..
(10) உன் கனவுகள் நிஜமாக எனையே தருவேன் உன் வாழ்வு மண்ணில் நீள என்னுயிர் தருவேன்
un kanavugaL niJamaaga
enaiyae tharuvaen
un vaazhvu maNNil neeLa
ennuyir tharuvaen
I’ll give myself, for your dreams to come true!
I’ll give my life, for your life to extend in this world!
[kochadaiyaan-manapennin-sathiyam-lyrics-and-translation]