lyricaldelights.com
[Bharathi – Vasana Kavithai] Wind – Part 12
காக்கை பறந்து செல்லுகிறது; காற்றின் அலைகளின்மீது நீந்திக்கொண்டு போகிறது. அலைகள்போலிருந்து, மேலே காக்கை நீந்திச்செல்வதற்கு இடமாகும் பொருள் யாது? காற்று. அன்று, அஃதன்று காற்று; அது காற்றின் இடம். வாயு நிலயம். கண்ணுக்குத் தெரியாதபடி அத்தனை நுட்பமாகிய பூதத் தூள்களே (காற்றடிக்கும் போது) நம்மீது வந்து மோதுகின்றன. அத்தூள்களைக் காற்றென்பது உலகவழக்கு. அவை வாயு வல்ல, வாயு ஏறிவரும் தேர். பனிக்கட்டியிலே சூடேற்றினால் நீராக மாறிவிடுகிறது. நீரிலே சூடேற்றினால் ‘வாயு’ வாகிவிடுகிறது. தங்கத்திலே சூடேற்றினால் திரவமாக உருகிவிடுகிறது....