lyricaldelights.com
[Bharathi – Vasana Kavithai] Wind – Part 10-11
Wind - Part 10 & 11 10 மழை பெய்கிறது, ஊர் முழுதும் ஈரமாகிவிட்டது. தமிழ் மக்கள், எருமைகளைப்போல, எப்போதும் ஈரத்திலேயே நிற்கிறார்கள், ஈரத்திலேயே உட்கார்ந்திருக்கிறார்கள், ஈரத்திலேயே நடக்கிறார்கள், ஈரத்திலேயே படுக்கிறார்கள்; ஈரத்திலேயே சமையல், ஈரத்திலேயே உணவு. உலர்ந்த தமிழன் மருந்துக்குகூட அகப்படமாட்டான். ஓயாமல் குளிந்தா காற்று வீசுகிறது. தமிழ் மக்களிலே பலருக்கு ஜ்வரம் உண்டாகிறது. நாள்தோறும் சிலர் இறந்துபோகிறார்கள். மிஞ்சி யிருக்கும் மூடர் ‘விதிவசம்’ என்கிறார்கள். ஆமடா, விதிவசந்தான். ‘அறிவில்லாதவர்களுக்கு இன்பமில்லை’ என்பது ஈசனுடைய...