[Iruvar] Climax monologue
#EnnarumThozhane – another classic monologue from the movie #Iruvar. Penned by #Vairamuthu, voice given by #PrakashRaj, BGM by #ARR. Movie directed by #ManiRatnam.
Movie: Iruvar
Poet: Vairamuthu
Singers: Prakash Raj
Music: A.R.Rahman
Year: 1997
Casts: Mohanlal, Prakash Raj, Aishwarya Rai, Gautami, Tabu
Movie Director: Mani Ratnam
என்னரும் தோழனே, இதயத்து நண்பனே! மாணிக்க மழையே, மறைந்து விட்டாயா? முன்னொரு பொழுதில், மீசை முளைக்கிற வயதில், ஓர் இலையில் சோறு உண்டோம்... ஒரு பாயில் கண் மலர்ந்தோம்... அந்த நினைவுகளின் கண்ணீரில், நெஞ்சுக்குழி நிறைகிறது...
ennarum thoazhanae, idhayathu naNpanae!
maaNikka mazhaiyae, maRaindhdhu vittaayaa?
munnoru pozhudhil, meesai muLaikkiRa vayadhil,
oar ilaiyil soaRu uNdoam…
oru paayil kaN malarndhdhoam…
andhdha ninaivugaLin kaNNeeril, nenjjukkuzhi niRaigiRadhu…
Oh my beloved friend! My close to heart friend!
Oh emerald shower, did you pass away?
Long time ago, when we were youth,
We ate in the same plate.
We woke up in the same mattress.
With those memories filled with happy-tears, my heart gets heavy.
நம் கண்கள் வெவ்வேறு, கனவுகள் ஒன்றுதான்! நம் நெஞ்சம் வெவ்வேறு, நினைவுகள் ஒன்றுதான்! நம் கோட்டைகள் வெவ்வேறு, கொள்கைகள் ஒன்றுதான்!
nam kaNkaL vevvaeRu, kanavugaL ondRudhaan!
nam nenjam vevaeRu, ninaivugaL ondRudhaan!
nam koattaigaL vevvaeRu, koLkaigaL ondRudhaan!
Our visions are different, but our dreams are identical!
Our hearts are different, but our memories are identical!
Our kingdoms are different, but mottos are identical!
எதிலும் முந்தி வர துடிக்கும் முனைபுள்ளவனே... சாவிலும் என்னை முந்தி சரித்திரம் ஆயினையோ?
edhilum mundhdhi vara thudikkum munaibuLLavanae…
saavilum ennai mundhdhi sarithiram aayinaiyoa?
You had an attitude to become first in everything.
Did you overtook me in death too to make history?
என் வெற்றிக்கு மாலை தந்த கரம் எங்கே? என் விழி நீரை சுண்டிவிட்ட விரல் எங்கே? குழல் கொண்ட இசையாக கொஞ்சுகின்ற குரல் எங்கே? என் முத்துவேல் வசனத்தை முத்தமிட்ட உதடெங்கே? என்னை ஒரு நாள் சுமந்து ஏற்றி வந்த தோள் எங்கே?
en vetRikku maalai thandhdha karam enggae?
en vizhi neerai suNdivitta viral enggae?
kuzhal koNda isaiyaaga konjjugindRa kural enggae?
en muthuvael vasanathai muthamitta udhadenggae?
ennai oru naaL sumandhdhu aetRi vandhdha thoal enggae?
Where is the hand that gave garland to my victories?
Where is the finger that wiped away my tears?
Where is that sweet voice, that sounded like music from a flute?
Where are those lips that uttered my dialogues for the movie “Muthuvel”?
Where is the shoulder that carried me in the past?
அய்யகோ! இனி பார்க்கவே மாட்டாய நண்பா?
ayyagoa!
ini paarkkavae maadaaya naNpaa?
Oh dear!
Won’t you see me again, my friend?
எல்லின் முனை அளவும் இப்பொழுது கசப்பில்லை. புல்லின் நுனி அளவும் இப்பொழுது பகை இல்லை. மரணத்தை போல என் மனதிற்கு மருந்தில்லை.
ellin munai aLavum ippozhudhu kasappillai.
pullin nuni aLavum ippozhudhu pagai illai.
maraNathai poala en manadhiRku marundhdhillai.
I don’t have bitterness even to the size of the tip of sesame seed now.
I don’t have enmity even to the size of the tip of a grass blade now.
There is no better medicine to my heart than death now.
உன்னோடு ஒரு வார்த்தை பேசத்தான் நினைதேன் முடியவில்லை நலிந்து விட்ட உடல் வருடி நலம் கேட்க துடித்தேன், முடியவில்லை இன்று உன் ரோஜா பூ முகத்தில் முத்தமிட நினைக்கிறன், முடியவில்லை முட்டி வரும் கண்ணீரை மூடிவிட நினைகிறேன், முடியவில்லை.
unnoadu oru vaarthai paesathaan ninaidhaen mudiyavillai
nalindhdhu vitta udal varudi nalam kaetka thudithaen, mudiyavillai
indRu un roaJaa poo mugathil muthamida ninaikkiRan, mudiyavillai
mutti varum kaNNeerai moodivida ninaigiRaen, mudiyavillai.
I wished to have spoken to you once atleast, but I couldn’t.
I was restless to ask you about your declining health comforting you, but I couldn’t.
Today, I wish to kiss your rose-like face, but I couldn’t.
I wish to stop my uncontrollable tears, I couldn’t.
போய் வா நண்பா போய் வா...
poay vaa naNpaa poay vaa…
Fare well my friend!
உன் பக்கத்தில் எனக்கும் ஒரு படுக்கை விரித்து வை. என்றேனும் ஒரு நாள் உன் அருகில் நான் வருவேன். இன்னொரு பொன்னேரம் என்னை தேடி வந்தால். காலம் ஒரு செங்கோலை என் கையில் தந்தால் உன் கனவும் என் கனவும் ஒரு பொழுதில் நிறைவேறும். உன் கல்லறையின் காதுகளில் நல்ல செய்தி அரங்கேறும்!
un pakkathil enakkum oru padukkai virithu vai.
endRaenum oru naaL un arugil naan varuvaen.
innoru ponnaeram ennai thaedi vandhdhaal.
kaalam oru senggoalai en kaiyil thandhdhaal
un kanavum en kanavum oru pozhudhil niRaivaeRum.
un kallaRaiyin kaadhugaLil nalla seydhi aranggaeRum!
Lay a mattress next to you for me.
Some day I will get closer to you.
If once again, a golden opportunity comes to me,
If time gives me a scepter in my hand,
Both your dream and mine will be full-filled in a day.
The good news will reach to the ears of your tombstone.
(Iruvar Climax monologue translation)
Thanks, very handy!